துக்ளக் தர்பார் டிரைலர் வெளியானது
ADDED : 1540 days ago
பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, மஞ்சிமாமோகன், பார்த்திபன், சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் துக்ளக் தர்பார். இந்தபடம் அரசியலை நைய்யாண்டி செய்யும் கதையில் உருவாகியுள்ளது. செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் நேரடியாக டிவியிலும், ஓடிடியிலும் வெளியாகிறது.
தற்போது துக்ளக் தர்பார் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இன்னும் 300 வருடம் ஆனாலும் எதுவுமே மாறப்போவதில்லை என்று விஜய் சேதுபதி பேசும் வசனமும், அரசியல் என்பது விசுவாசம் இல்லடா அது ஒரு கணக்கு என்று பார்த்திபன் பேசும் வசனமும் ஹைலைட்டாக அமைந்துள்ளன.