உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் சேதுபதி - பிரேம்குமார் கூட்டணியில் த்ரிஷா இடம் பெறுவாரா?

விஜய் சேதுபதி - பிரேம்குமார் கூட்டணியில் த்ரிஷா இடம் பெறுவாரா?

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - த்ரிஷா நடித்து வெளியான படம் 96. பள்ளிப்பருவ காதல் கதையில் உருவான இந்த படத்தைப் பார்த்த அனைவரையுமே பள்ளி பருவத்துக்கு கொண்டு செல்லும் விதமான கதையோட்டம் அமைந்திருந்தது. விஜய் சேதுபதி - த்ரிஷா ஆகிய இருவருமே ராம் - ஜானு கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருந்தனர்.

அதன்பிறகு, 96 படத்தை தெலுங்கிலும் ஜானு என்ற பெயரில் ரீமேக் செய்தார் பிரேம் குமார். சர்வானந்த், சமந்தா நடித்தனர். இந்த நிலையில் மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் பிரேம் குமார். இந்த படமும் 96 படத்தைப் போலவே ஒரு அழுத்தமான காதல் கதையில் உருவாகிறதாம். ஆனால் இந்த படத்தில் நாயகியாக நடிப்பது த்ரிஷாவா? இல்லை வேறு நடிகையா? என்பது தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !