அஜித்தின் இன்னொரு படத்தையும் வாங்கும் சிரஞ்சீவி
ADDED : 1594 days ago
தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்த சிரஞ்சீவி, அதையடுத்து தற்போது அஜீத் நடித்த வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்கப் போகிறார். இந்த படத்திற்கு போலா சங்கர் என்ற டைட்டில் வைத்துள்ளார்.
அதோடு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கான காட்பாதரிலும் தற்போது நடித்து வரும் சிரஞ்சீவி, இதையடுத்து கெளதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்த என்னை அறிந்ததால் படத்தின் ரீமேக்கிலும் நடிக்கப் போகிறார். இந்தபடத்தின் உரிமையை வாங்க பேசி வருவதோடு இப்படத்திற்கான சரியான இயக்குனரையும் தேடி வருகிறார்.