சன்னிலியோனின் ஓ மை கோஸ்ட்
ADDED : 1540 days ago
கதை நாயகியாக சன்னிலியோன் நடிக்கும் படத்திற்கு, ‛ஓஎம்ஜி (ஓ மை கோஸ்ட்)' என தலைப்பு வைத்துள்ளனர். வரலாற்று பின்னணியில் திகில் நிறைந்த காமெடி படமாக உருவாகும் இப்படத்தின் முதல் போஸ்டரை நேற்று வெளியிட்டனர். சதீஷ், தர்ஷா குப்தா, மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜாவித் ரியாஸ் இசையமைக்க, ஆர்.யுவன் படத்தை எழுதி இயக்குகிறார். வீராசக்தி, சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர்.