மேலும் செய்திகள்
மனிதத்தன்மையை அழித்துவிடும் : நிவேதா பெத்துராஜ்
1486 days ago
200 படங்களை கடந்த 2025
1486 days ago
முதல் நாளில் 154 கோடி வசூலித்த பவன் கல்யாணின் ஓஜி
1486 days ago
அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி
1486 days ago
தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து கதாநாயகனாக உயர்ந்தவர் சந்தானம். அவர் நடித்து எப்போதோ வெளிவர வேண்டிய 'சர்வர் சுந்தரம்' படம் அடுத்தடுத்து பல்வேறு காரணங்களால் வெளியீடு தள்ளிக் கொண்டே வந்தது.
கடைசியாக கடந்த வருடம் ஜனவரி மாதம் வெளியிட திட்டமிட்டார்கள். ஆனால், அப்போது சந்தானம் நடித்த மற்றொரு படமான 'டகால்டி' படத்தை வெளியிட அதன் தயாரிப்பாளர் முடிவு செய்தார். பின்னர் நடைபெற்ற பஞ்சாயத்தில் 'சர்வர் சுந்தரம்' படத்தை இரண்டு வாரங்களுக்குத் தள்ளி வைத்தார்கள். ஆனால், அப்போதும் அப்படம் வெளிவரவில்லை.
பட வெளியீடு குறித்து அதன் இயக்குனர் பால்கி பல முறை அவருடைய வருத்தத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று ரசிகர் ஒருவர் சந்தானத்திடம் இன்ஸ்டாகிராமில் பட வெளியீடு குறித்து கேட்டதற்கு, படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று சொன்னார் சந்தானம்.
இப்படத்தில் சந்தானம், வைபவி சாண்டில்யா, நாகேஷ் பேரன் பிஜேஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
1486 days ago
1486 days ago
1486 days ago
1486 days ago