ஷங்கர்-ராம்சரண் படம் 2023ல் ரிலீஸ்
ADDED : 1495 days ago
ஷங்கர் இயக்கும் ராம்சரணின் 15வது படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம், பகத் பாசில் என பலர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். தில்ராஜூ தயாரிக்கிறார். அரசியல் திரில்லர் கதையில் உருவாகும் இப்படத்தை செப்டம்பரில் தொடங்கி அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக ஏற்கனவே அறிவித்தனர். ஆனால் அடுத்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபரில் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளாராம் ஷங்கர். அதனால் அதன்பிறகு இறுதிகட்ட பணிகளை தொடங்கி 2023ஆம் ஆண்டு சங்கராந்திக்கு படத்தை வெளியிட தற்காலிகமாக திட்டமிடப்பட்டுள்ளதாம்.