அம்மா நடிக்கும் காட்சியை இயக்கிய பிரித்விராஜ்
மலையாள நடிகர் பிரித்விராஜும் அவரது அண்ணன் இந்திரஜித்தும் தற்போது முன்னணி நடிகர்களாக வலம் வருகிறார்கள். இவர்களது தந்தை மறைந்த நடிகரான சுகுமாரனும் பிரபல நடிகராக இருந்தவர் தான். பிரித்விராஜின் அம்மா மல்லிகா முன்னாள் நடிகை என்றாலும் திருமணத்துக்கு பிறகு நடிப்பை விட்டு ஒதுங்கி மகன்களை வளர்த்து ஆளாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
தற்போது மகன்கள் பெரிய நடிகர்களாக மாறிவிட, தனது கணவரும் மறைந்துவிட்ட நிலையில் மீண்டும் குணச்சித்திர நடிகையாக அரிதாரம் பூசி நடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது தனது மகன் பிரித்விராஜ், மோகன்லாலை வைத்து இயக்கி வரும் “ப்ரோ டாடி” படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் மல்லிகா சுகுமாரன்.
மிகச்சிறந்த நடிகரையும் என்னுடைய மதிப்பிற்குரிய அம்மாவையும் ஒரே பிரேமில் இயக்கியது மாபெரும் தருணம் என இதுகுறித்து தனது இரட்டிப்பு சந்தோசத்தை வெளிப்படுத்தியுள்ளார் பிரித்விராஜ்.