மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
1465 days ago
மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம்
1465 days ago
வினோத் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித்குமார், ஹுமா குரேஷி மற்றும் பலர் நடிக்கும் படம் 'வலிமை'. இப்படத்தின் சில முக்கியக் காட்சிகள் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் படமாக்கப்பட்டது. அத்துடன் படப்பிடிப்பு முடிவடைந்து படக்குழுவினர் சென்னை திரும்புகிறார்கள்.
படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் ஏற்கெனவே நடந்து ஏறக்குறைய முடிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். சமீபத்தில் எடுத்த ரஷியக் காட்சிகளின் இறுதிப் பணிகளையும் சேர்த்து விரைவில் முடிக்க உள்ளார்கள்.
இப்படத்தின் முதல் சிங்கிள் 'நாங்க வேற மாறி' கடந்த மாதம் வெளியாகி 2 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. மற்ற பாடல்களும் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அடுத்து 'வலிமை' படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் உள்ளனர்.
அக்டோபர் மாதம் நவராத்திரி விடுமுறையில் வருமா அல்லது நவம்பர் மாதம் தீபாவளி விடுமுறையில் வருமா என அந்த இரண்டு நாட்களை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். விரைவில் படம் வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.
1465 days ago
1465 days ago