உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிட்னஸா, கிளாமரா : பூஜா தரும் போஸ்

பிட்னஸா, கிளாமரா : பூஜா தரும் போஸ்

தமிழில் 'முகமூடி' படத்தில் அறிமுகமான நடிகை என்று சொன்னால் பலருக்கும் தெரியாது. ஆனால், விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் கதாநாயகி என்று சொன்னால் தெரிந்துவிடும். தெலுங்கில் மற்ற நடிகைகளை பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்கு வேகமாக முன்னேறிக் கொண்டிருப்பவர் பூஜா. ஹிந்தியிலும் நடித்து வருகிறார். மற்ற பாலிவுட் நடிகைகளைப் போல ஜிம்முக்குப் போகும் போது புகைப்படக் கலைஞர்களுக்ப் போஸ் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

நேற்று அவர் வெளியிட்டுள்ள ஜிம் புகைப்படம் ஒன்று அது கிளாமரா, கவர்ச்சியா என்று சந்தேகம் எழுப்பும் அளவிற்கு அமைந்துள்ளது. டைட்டான லெக்கிங்ஸ், ஸ்போர்ட்ஸ் மேலாடை என ஒரு செல்பி எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். வழக்கம் போல அதற்கும் லட்சக்கணக்கில் லைக்ஸ்.

பூஜா வெளியிட்டது ஒரே ஒரு புகைப்படம்தான். ஆனால், புகைப்படக் கலைஞர்கள் அந்த ஆடையில் பலவித புகைப்படங்களை எடுத்துத் தள்ளியதால் அவை சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளன. 'பீஸ்ட்' வெளியான பிறகு பூஜா ஹெக்டே தமிழிலும் முன்னணிக்கு வந்துவிடுவார் என தாராளமாகச் சொல்லிவிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !