உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய்சேதுபதியின் 3 காதலிகளும் வில்லிகளா ?

விஜய்சேதுபதியின் 3 காதலிகளும் வில்லிகளா ?

ஹீரோவாக நடித்துக்கொண்டு இருக்கும்போதே வில்லனாக நடிப்பதையும் அது ஒரு கதாபாத்திரம் என்கிற அளவிலேயே எடுத்துக்கொண்டு நடித்து வருகிறார் விஜய்சேதுபதி. அந்தவகையில் மாஸ்டர், உப்பென்னா படங்களை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலுடன் இணைந்து நடிக்கும் விக்ரம் படத்திலும் அவருக்கு வில்லன் கதாபாத்திரம் தான் என சொல்லப்படுகிறது.

அதுமட்டுமல்ல படத்தில் விஜய்சேதுபதிக்கு மொத்தம் மூன்று ஜோடிகளாம். சின்னத்திரை புகழ் ஷிவானி, மைனா நந்தினி மற்றும் மகேஸ்வரி ஆகியோர் தான் அந்த மூவர் என்றும் சொல்லப்படுகிறது. இந்த மூவரும் கூட வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறார்கள் என்றும் ஒரு தகவல் கசிந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !