சூர்யா படத்தில் நெகடிவ் ரோலில் சரண்
ADDED : 1490 days ago
தனுஷ் நடித்த வட சென்னை படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் தம்பியாக, தனது துறுதுறு நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் சரண் சக்தி குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்த இவர், தற்போது டீன் ஏஜ் பருவத்தை தாண்டியுள்ள நிலையில் சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தில், முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
மேலும் கேஜிஎப் படத்தின் இரண்டாவது பாகத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார் சரண் சக்தி. இந்தநிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் எதற்கு துணிந்தவன் படத்திலும் சரண் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். படத்தில் இவருக்கு நெகடிவ் கதாபாத்திரமாம். இந்தப்படத்தின் பூஜையன்று வெளியான புகைப்படங்களில் கூட சரண் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தகது.