உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எம்மதமும் சம்மதம் : நாகூர் தர்காவில் தொழுகை செய்த அருண் விஜய்

எம்மதமும் சம்மதம் : நாகூர் தர்காவில் தொழுகை செய்த அருண் விஜய்

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் விக்டர் என்ற வில்லனாக நடித்த அருண் விஜய்யின் மார்க்கெட் மறுபடியும் சூடுபிடிக்கத் தொடங்கியது. அதைத்தொடர்ந்து குற்றம் 23, தடம் போன்ற ஹிட் படங்களில் நடித்தவர் தற்போது அக்னிச் சிறகுகள், பாக்ஸர், சினம், பார்டர், ஹரி இயக்கும் படம் என பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது ஹரி இயக்கத்தில் தனது 33ஆவது படத்தில் நடித்து வருகிறார் அருண் விஜய். இந்த படத்தின் படப்பிடிப்பு நாகூர் தர்கா அமைந்துள்ள பகுதியில் நடைபெற்றபோது அந்த தர்காவிற்குள் சென்று தொழுகை நடத்திய அருண் விஜய், அந்த போட்டோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு, எம்மதமும் சம்மதம் என்றும் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !