உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 30ம் தேதி முதல் தமிழ் பேசப்போகும் ஜேம்ஸ் பாண்ட்

30ம் தேதி முதல் தமிழ் பேசப்போகும் ஜேம்ஸ் பாண்ட்

ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் 25வது படம் நோ டைம் டூ டை. 2015ல் வெளிவந்த ஸ்பெக்டர் படத்திற்கு பிறகு அதாவது 6 வருடங்களுக்கு பிறகு வெளிவரும் படம். கேரி ஜோஜி புகுனாகா இயக்கியுள்ள இந்தப் படத்தில் டேனியல் கிரேக் நாயகனாக நடிக்க, லியா செயோடக்ஸ் ஹீரோயினாக நடித்துள்ளார். ரமி மாலக், லூசிபர் சபின், மடெலின் ஸ்வான், லாஷனா லிஞ்ச், நோமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் வருகிற 28ம் தேதி உலக நாடுகளில் வெளியாகிறது. 30ம் தேதி இந்தியாவில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆங்கிலத்துடன், ஹிந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், பஞ்சாபி, குஜராத்தி, போஜ்புரி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !