இயக்குனர் டி.பி.கஜேந்திரனிடம் முதல்வர் உடல்நலம் விசாரிப்பு
ADDED : 1501 days ago
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் டி.பி.கஜேந்திரன்(66). ‛‛வீடு மனைவி மக்கள், எங்க ஊரு காவக்காரன், பாண்டி நாட்டு தங்கம், பட்ஜெட் பத்மநாபன்'' உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார். பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களிலும் நடித்துள்ளார். சென்னை, சாலிகிராமத்தில் வசித்து வரும் இவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்.மகேஷ் பொய்யாமொழி, தலைமை நிலைய செயலாளர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
இதுப்பற்றி டி.பி.கஜேந்திரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‛‛நானும், முதல்வர் ஸ்டாலினும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். ஒரே வகுப்பு தோழர். என் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் என்னை வந்து சந்தித்தார். மற்றபடி வேறொன்றும் இல்லை'' என்றார்.