தல ஸ்டைலை,கடன் பெற்ற காமெடி வில்லன்
ADDED : 1604 days ago
காமெடி ஹீரோ சந்தானம், காமெடி வில்லன் ஆனந்தராஜ் இணைந்து கலக்கும் 'டிக்கிலோனா' திரைப்படம் 10-ம்தேதி ஓ.டி.டி.,யில் ரீலிஸ் ஆகிறது. ஆனந்தராஜ் இதுவரை 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த படத்தில் தான் முதல் முறையாக விஞ்ஞானி வேடம் அவதரித்துள்ளார். இவருக்கு மங்குனி உதவியாளர் செய்கிற குழப்பம் வயிறு வலிக்க சிரிப்பை தரும்.
தன் தலைமுடி கெட்டப்பை வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக, அஜித் பாணிக்கு மாறியுள்ளார். அதாவது, அஜித்துக்கு ரொம்ப பிடித்த பெப்பர் அண்ட் சால்ட் 'தல' ஸ்டைலை ஆனந்தராஜ் தன் தலைக்கு கடனாக பெற்றுள்ளார் போலும்.