அந்தகன் - டப்பிங்கை முடித்த யோகிபாபு!
ADDED : 1631 days ago
ஹிந்தியில் 2018ல் வெளியான படம் அந்தாதூன். ஆயுஸ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடித்திருந்த இப்படம் 3 தேசிய விருதுகளை பெற்றது. இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பெற்ற நடிகர் தியாகராஜன், தனது மகன் பிரசாந்தை நாயகனாக வைத்து அந்தகன் என்ற பெயரில் அப்படத்தை இயக்கியுள்ளார். சிம்ரன், பிரியா ஆனந்த், வனிதா விஜயகுமார், சமுத்திரகனி, யோகிபாபு உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் அனைத்துக்கட்ட படப்பிடிப்புகளும் முடிந்துவிட்ட நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடக்கிறது. இந்நிலையில் தற்போது யோகிபாபு தனக்கான டப்பிங் பணிகளை முடித்துள்ளார். இந்த தகவலை அந்தகன் படக்குழு வெளியிட்டுள்ளது.