உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய்-பூஜா ஹெக்டே நடிப்பில் ஸ்டைலிஷான பாடல் படமாகி வருகிறது!

விஜய்-பூஜா ஹெக்டே நடிப்பில் ஸ்டைலிஷான பாடல் படமாகி வருகிறது!

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கிய நிலையில் தொடர்ந்து சென்னையில் பல கட்டமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இதுவரை விஜய்யுடன் ரொமான்டிக் காட்சிகளில் நடித்து வந்த பூஜா ஹெக்டே, தற்போது பாடல் காட்சியில் நடித்து வருகிறார்.


இந்த பாடலை படமாக்க கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் செட் அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில் தற்போது விஜய்யும், பூஜா ஹெக்டேயும் அந்த டூயட் பாடலில் ஸ்டைலிசான உடையணிந்து நடனமாடி வருகின்றனர். இந்த பாடலுக்கு ஜானி மாஸ்டர் நடனம் அமைத்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !