தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகரான மகேஷ்பாபு, நடிகரும், தனது தந்தையுமான கிருஷ்ணாவுக்கு ஆசிரியர் தினத்தையொட்டி சோசியல் மீடியாவில் சிறுவயதில் தனது தந்தையுடன்தான் எடுத்துக்கொண்ட போட்டோவுடன் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், அன்பு, வலிமை, ஒழுக்கம், இரக்கம் மற்றும் பணிவு ஆகியவற்றை கற்றுக்கொடுத்த என் தந்தைக்கு நன்றி. அவருக்கும் எனது பயணத்தில் கற்றுக்கொள்ளவும் பரி ணமிக்கவும் உதவிய அனைவருக்கும் நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். #டீச்சர்ஸ் டே என்று மகேஷ்பாபு டுவீட் செய்துள்ளார். இது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.