சிங்கம், யானையை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்
ADDED : 1542 days ago
நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது டாக்டர், டான் படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களுக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே டாக்டர் பட பாடல்கள் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருக்கும் விஷ்ணு என்கிற சிங்கத்தையும், பிரக்ரிதி என்கிற யானையையும் சிவகார்த்திகேயன், ஆறுமாத காலத்திற்கு தத்தெடுத்துள்ளதாக உயிரியல் பூங்கா இணை இயக்குனர் காஞ்சனா தெரிவித்துள்ளார். விலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் பராமரிப்பு செலவை அவர் ஏற்றுள்ளார். அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.