மோகன்லாலின் ஜிம் மேட்டாக மாறிய கல்யாணி
ADDED : 1575 days ago
மலையாள திரையுலகில் நட்புக்கு எடுத்துக்காட்டாய் விளங்குபவர்கள் நடிகர் மோகன்லாலும் இயக்குனர் பிரியதர்ஷனும். கிட்டத்தட்ட 35 படங்களுக்கும் மேல் இணைந்து பணியாற்றியுள்ள இவர்கள் 40 வருடங்களாக தங்கள் கூட்டணியை தொடர்ந்து வருகின்றனர். இந்த நட்பு தலைமுறை தாண்டியும் தொடர்கிறது. ஆம் மோகன்லாலுடன் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதில் நட்பு கூட்டணி அமைத்திருக்கிறார் பிரியதர்ஷன் மகள் கல்யாணி.
ஏற்கனவே மோகன்லாலுடன் மரைக்கார் என்கிற படத்தில் நடித்துள்ள கல்யாணி, தற்போது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் 'ப்ரோ டாடி' என்கிற படத்திலும் அவருடன் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அங்கேதான் மோகன்லாலுடன் சேர்ந்து தினசரி ஜிம்முக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்.
அப்படி ஜிம்மில் மோகன்லாலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, 'அவர் சும்மா வார்ம் அப் செய்த விஷயங்கள் தான் என்னுடைய மொத்த பயிற்சியும்” என்று கூறியுள்ளார். இந்த புகைபடம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.