ஷங்கர்-ராம்சரண் பட டைட்டில் விஸ்வம்பரா?
ADDED : 1534 days ago
ராம்சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கும் பான்இந்தியா படத்தின் பூஜை நேற்று ஐதராபாத்திலுள்ள அன்ன பூர்ணா ஸ்டுடியோவில் பிரமாண்டமாக நடைபெற்றது. அரசியல் திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் ராம்சரண் இளம் அரசியல் தலைவராக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு விஸ்வம்பரா என்று டைட்டில் வைக்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. விஸ்வம்பரா என்றால் தமிழில் பூமி என்று அர்த்தம்.