உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வாள்வீச்சு வீராங்கனைக்கு தங்க சங்கிலி பரிசளித்து பாராட்டிய சசிகுமார்

வாள்வீச்சு வீராங்கனைக்கு தங்க சங்கிலி பரிசளித்து பாராட்டிய சசிகுமார்

தமிழகத்தை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி. டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு சில புள்ளிகள் வித்தியாசத்தில் பதக்க வாய்ப்பை இழந்தார். என்றாலும் தனி நபர் போட்டி பிரிவில் அவர் ஒலிம்பிக் வரை சென்றதே பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. அவர் தோற்று திரும்பிய பிறகும்கூட தமிழக முதல்வர் அவரை அழைத்து பாராட்டினார்.


இந்த நிலையில் நடிகரும், இயக்குனருமான சசிகுமார், பவானி தேவியை சந்தித்து அவருக்கு தங்க சங்கிலி அணிவித்து பாராட்டி உள்ளார். இந்த தகவலை தற்போது சசிகுமார், ஜோதிகா நடிப்பில் உடன்பிறப்பே படத்தை இயக்கி வரும் ரா.சரவணன் தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் எழுதியிருப்பதாவது:


வென்றால் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவோம்; தோற்றால், பார்க்கக்கூட மாட்டோம். எல்லோர் இயல்பும் இதுதான் என்றாலும், நல்லோர் இயல்பு வேறல்லவா? ஒலிம்பிக் வாள் சண்டையில் பதக்கம் இழந்த பவானி தேவியை சந்தித்து, தங்க செயின் அளித்து வாழ்த்தி இருக்கிறார் நடிகர் சசிக்குமார். நல்லமனம் வாழ்க. என்று எழுதியிருக்கிறார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !