மகன் மூலம் நிறைவேறிய சிரஞ்சீவியின் ஆசை
ADDED : 1616 days ago
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண், கியாரா அத்வானி, ஜெயராம், சுனில், நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கி உள்ளது. தில்ராஜ் தயாரிக்கிறார்.
இது தொடர்பாக சிரஞ்சீவி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஷங்கர் இயக்கத்தில் தான் நடிக்க ஆசைப்பட்டதாகவும், அந்த ஆசை மகன் மூலம் நிறைவேறி இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.