மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
1458 days ago
மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம்
1458 days ago
மலையாளத்தில் பிரேமம் என்கிற ஹிட் படத்தையும், நஸ்ரியா, சாய் பல்லவி உள்ளிட்ட நான்கு கதாநாயகிகளையும் திரையுலகுக்கு கொடுத்தவர் அல்போன்ஸ் புத்ரன். பிரேமம் படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் தனது மூன்றாவது படத்தை இயக்குகிறார். பிரித்விராஜ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார், இந்த படத்தை பிரித்விராஜ் மற்றும் மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியது. இந்த நிகழ்வில் பிரித்விராஜ், நயன்தாரா இருவருமே கலந்து கொள்ளவில்லை என்றாலும், பிரித்விராஜின் தாயார் மல்லிகா சுகுமாரன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். இதற்கு முன்னதாக அல்போன்ஸ் புத்ரன், காளிதாஸ் ஜெயராம் மற்றும் பஹத் பாசில் ஆகியோரை வைத்து படங்கள் இயக்குவதாக சொல்லப்பட்டு அது வெறும் பேச்சாகவே போய்விட்ட நிலையில், தற்போது பிரித்விராஜை வைத்து இவர் இயக்கும் படம் அதிகாரப்பூர்வமாக பூஜையுடன் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
1458 days ago
1458 days ago