சுராஜைத் தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் வடிவேலு
ADDED : 1524 days ago
நடிகர் வடிவேலு நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது சுராஜ் இயக்கும் நாய்சேகர் படத்தில் நடிக்கப்போகிறார். இந்தபடத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில் கூடிய சீக்கிரமே படப்பிடிப்புக்கு செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், வடிவேலுவை வைத்து ஐந்து படங்ளை லைகா நிறுவனம் தயாரிக்கயிருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது நலன்குமாரசாமியிடமும் வடிவேலுவிற்கு அந்நிறுவனம் கதை கேட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் சில இளவட்ட டைரக்டர்களும் வடிவேலுவிற்கேற்ற காமெடி கதைகளை சொல்லி வருகிறார்களாம்.
ஆக, நாய்சேகர் படத்தை அடுத்து சந்திரமுகி-2வில் நடிக்கயிருப்பதை ஏற்கனவே வடிவேலு உறுதிப்படுத்தி விட்ட நிலையில் அவர் அடுத்தடுத்து நடிக்கும் படங்கள் குறித்த தகவல்களும் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.