உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டார்லிங் என அழைத்து கார்த்திக்குக்கு வாழ்த்து சொன்ன குஷ்பு

டார்லிங் என அழைத்து கார்த்திக்குக்கு வாழ்த்து சொன்ன குஷ்பு

நடிகர் கார்த்திக் நேற்று தனது 61ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். அதையொட்டி அவருக்கு நடிகை குஷ்பூ தனது டுவிட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார். அதில், 'என் டார்லிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள். என் நெருங்கிய நண்பர்... என் முரளி... என் கணவருக்கு அண்ணன்... என் குழந்தைகளுக்கு அன்பான பெரியப்பா... கார்த்திக், நீங்கள் எப்பொழுதுமே எங்களுக்கு ஸ்பெஷலானவர். உங்களை கொஞ்சம் அளவுக்கு அதிகமாக நேசிக்கிறேன். அது உங்களுக்கே தெரியும்...' என்று குறிப்பிட்டுள்ளார். முரளி என்பது கார்த்திக்கின் இயற்பெயர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !