காதலி நயன்தாராவுடன் மாமியார் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்
ADDED : 1496 days ago
தமிழில் அண்ணாத்த படத்தை அடுத்து விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. இதுதவிர தெலுங்கில் சிரஞ்சீவியுடன் காட்பாதர் மற்றும் ஷாரூக்கானுடன் அட்லி இயக்கும் ஹிந்தி படம் மற்றும் மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் தனது தாயாரின் பிறந்தநாளை நேற்று காதலன் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கொண்டாடியுள்ளார் நயன்தாரா. அதுகுறித்த புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் நயன்தாரா. விக்னேஷ் சிவன் இந்த கொண்டாட்ட படங்களை தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டு வருங்கால மாமியாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு மாமியாருக்கு இப்போதே ஐஸ் வைக்க தொடங்கிவிட்டார் போல விக்னேஷ் சிவன் என ரசிகர்கள் கருத்து பதிவிட்டுள்ளனர்.