உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நயன்தாரா உடன் அனிருத் நடனம்

நயன்தாரா உடன் அனிருத் நடனம்

சினிமாவில் சில படங்களுக்கு இசையமைத்து வந்தபோது விரைவில் தான் ஹீரோவாக நடிக்கப் போவதாக கூறி வந்தார் அனிருத். பின்னர் அந்த முயற்சியை கைவிட்டபோதிலும், வணக்கம் சென்னை, மாரி போன்ற படங்களில் பாடலில் தோன்றி நடனமாடினார்.

தற்போது விக்னேஷ்சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் சிங்கிள் ஏற்கனவே வெளியான நிலையில் டூ டூ டூ என தொடங்கும் இரண்டாவது சிங்கிள் வருகிற 18-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் பாடல் குறித்த வீடியோ ஒன்றை விக்னேஷ் சிவன் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். நயன்தாரா நடித்துள்ள அந்த பாடலில் அனிருத்தும் தோன்றுகிறார். அந்தவகையில் இந்த பாடலில் நயன்தாராவுடன் இணைந்து அனிருத்தும் நடனமாடியிருப்பது தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !