மீண்டும் இறங்கி வரும் ராஜமவுலி
ADDED : 1524 days ago
இயக்குனர் ஷங்கராகட்டும் அல்லது ராஜமவுலி ஆகட்டும் தாங்கள் எடுக்கும் ஒவ்வொரு புதிய படத்தையும் தங்களது முந்தைய படங்களின் பட்ஜெட்டை விட அதிகமான செலவில் இன்னும் பிரமாண்டமாகவே எடுத்து வருகின்றனர். ஷங்கர் கூட முதல் படத்தில் இருந்தே பிரம்மாண்டம் காட்டி வருகிறார். ஆனால் ராஜமவுலியோ இடையில் மரியாத ராமண்ணா என்கிற பட்ஜெட் படத்தை ஒரு காமெடி நடிகரை ஹீரோவாக வைத்து இயக்கினார்.
இந்தநிலையில் தற்போது தான் இயக்கிவரும் ஆர்ஆர்ஆர் படத்தை முடித்துவிட்டு, அடுத்தததாக மரியாத ராமண்ணா படம் போல சின்ன பட்ஜெட்டில் ஒரு படம் இயக்கப்போகிறாராம் ராஜமவுலி. ஆர்ஆர்ஆர் படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் கடந்து நடைபெற்று வருவதாலும், இடையில் கொரோனா தாக்கமும் சேர்ந்துகொண்டு படப்பிடிப்பை தாமதப்படுத்தி விட்டதாலும் இந்த முடிவை எடுத்துள்ளாராம் ராஜமவுலி.
இதன்படி தனது அடுத்த படத்தை ஒருமாதம் படப்பிடிப்பு, இரண்டு மாதம் போஸ்ட் புரொடக்சன் என வெறும் மூன்றே மாதங்களில் முடித்து ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளாராம் ராஜமவுலி.