தொகுப்பாளினியாக களமிறங்கும் சிவாங்கி!
ADDED : 1489 days ago
சூப்பர் சிங்கர் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு தன் இனிய குரலால் ரசிகர்களை கட்டிப்போட்டார் சிவாங்கி. அதன் பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான நபராக மாறினார். இதன் காரணமாக படத்தில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்புகள் தேடி வந்தன. தற்போது சிவகார்த்திகேயனின் டான், காசேதான் கடவுளடா உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தொகுப்பாளினியாக களமிறங்கும் தகவலை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்.
சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியை தற்போது மா கா பா ஆனந்த் மற்றும் ப்ரியங்கா இணைந்து தொகுத்து வழங்கி வருகின்றனர். இனி வரும் சூப்பர் சிங்கர் 8 மற்றும் சூப்பர் சிங்கர் சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன்ஸ் நிகழ்ச்சிகளின் எபிசோடுகளை சிவாங்கி தொகுத்து வழங்குவார் என எதிர் பார்க்கப்படுகிறது. சின்னத்திரையில் மீண்டும் சிவாங்கியை பார்க்கப் போவதால் அவரது ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.