டிஸ்னி ஹாட் ஸ்டார் - பிராண்ட் அம்பாசிடரான ராம்சரண்
ADDED : 1480 days ago
ஆச்சார்யா, ஆர்ஆர்ஆர் படங்களைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கி வரும் பான்இந்தியா படத்தில் நடித்து வருகிறார் ராம்சரண். இந்நிலையில், டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தின் பிராண்ட் அம்பாசிடராக அவர் நியமிக்கப்பட்டிருப்பதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து ராம்சரண் பங்கேற்றும் முதல் விளம்பரம் தற்போது படமாகியுள்ளது. அதில் ஒரு மந்திரவாதியின் உடையணிந்து அவர் நடித்துள்ளார். இந்த ஓடிடி செயலியின் தெலுங்கு பதிப்பை விளம்பரப்படுத்தப்போகிறார் ராம்சரண். இதற்கான ஒப்பந்தத்தில் சைன் பண்ணியதை அடுத்து அவருக்கு ரூ.5 கோடி தொகை வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.