மீரா மிதுன் பேய் வேடத்தில் நடிக்கும் "பேய காணோம்"
ADDED : 1520 days ago
குளோபல் எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனம் சார்பில் தேனி பாரத் R.சுருளிவேல் தயாரிக்கும் படத்திற்கு பேய காணோம் என்று வித்தியாசமான தலைப்பை வைத்துள்ளார். இந்த படத்தில் மீரா மிதுன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இயக்குனர் தருண் கோபி, கவுசிக், சந்தியா ராமச்சந்திரன், கோதண்டம், முல்லை, ஜெயா டிவி ஜேக்கப், செல்வகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். செல்வ அன்பரசன் என்பவர் இயக்குகிறார்.
வாழ்க்கையில் பணத்தை காணோம், குழந்தையை காணோம், பொருளை காணோம், நண்பனை காணோம், இன்னும் எதை எதையோ காணோம் என்று தேடியிருப்போம். முதன் முதலாக ஒரு பேயை தேடுகிறார்கள். பேயை எதற்காக தேடுகிறார்கள் என்பது தான் படத்தின் திரைக்கதை. முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பேய் படம் இது. 90 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படத்தின் நாயகி மீரா மிதுன் ஜாமினுக்காக காத்திருக்கிறார்கள். ஜாமின் கிடைத்தவுடன் படத்தின் இதர 10 சதவீதம் காட்சியை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.