ஒரே படத்துக்கு 2 சர்வதேச விருதுகளை வென்ற மகிமா நம்பியார்
ADDED : 1560 days ago
'மவுனகுரு' படத்தின் இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் மகாமுனி திரைப்படம் வெளியானது. ஆர்யா இரட்டை வேடங்களில் நடித்து வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. மகிமா நம்பியார் மற்றும் இந்துஜா இருவரும் கதாநாயகியாக நடித்திருந்தனர். ஜெயப்பிரகாஷ், இளவரசு, ரோகிணி, பாலாசிங், அருள்தாஸ், காளி வெங்கட், தீபா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மகாமுனி திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும் பல விருதுகளைக் குவித்த வண்ணம் உள்ளது.