நவ.,19ல் பார்டர் ரிலீஸ்
ADDED : 1489 days ago
குற்றம் 23 படத்திற்கு பின் நடிகர் அருண் விஜய், இயக்குனர் அறிவழகன் மீண்டும் இணைந்த படம் பார்டர். ஸ்டெபி படேல், ரெஜினா நாயகிகளாக நடித்துள்ளனர். பாதுகாப்பு புலனாய்வு தொடர்புடைய அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது. இதில் ரெஜினா பயங்கரவாதி போன்ற வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கும் படத்தில் ஆக் ஷன் காட்சியெல்லாம் உள்ளது. சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் நவ., 19ல் இப்படம் தியேட்டரில் வெளியாவதாக அறிவித்துள்ளனர்.