'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'
ADDED : 1537 days ago
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' படத்தை கே.குமார் தயாரித்துள்ளார். மிர்ச்சி சிவா கதை நாயகனாக நடிக்க, அஞ்சு குரியன், மேகா ஆகாஷ் நாயகியராக நடிக்கின்றனர். இவர்களுடன் பாடகர் மனோ, நடிகர் மா கா பா ஆனந்த், ஷா ரா, மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா , கே பி ஒய் பாலா, மைக்செட் அபினாஷ், நடிகை வித்யா வினுமோகன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று செப். 20 முதல் தொடங்கியது. வித்தியாசமான பேண்டஸி காமெடி களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் துவக்க விழாவில், தயாரிப்பார்கள் ஞானவேல்ராஜா, டாக்டர் பிரபுதிலக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
படம் பற்றி மேகா ஆகாஷ் கூறுகையில், ''மிகவும் வித்தியாசமான பாத்திரம் எனக்கு, படத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்,'' என்றார்.