கண்மணியின் அசத்தல் போட்டோ ஷூட்
ADDED : 1572 days ago
செய்தி வாசிப்பளரான கண்மணி தற்போது நடிகைகளுக்கு இணையாக ரசிகர்களின் மனதை அள்ளி வருகிறார். வீஜே, மாடல் என புது அவதாரங்களை எடுத்து வரும் கண்மணி, இன்ஸ்டாகிரமில் போடும் போட்டோஷூட்களை கூட்டம் கூட்டமாக வந்து மொய்க்கின்றனர் அவரது ரசிகர்கள். இந்நிலையில் அவர் நடித்த குறும்படத்தின் டீசரும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மாடலிங்கில் களமிறங்கியுள்ள கண்மணி தற்போது முன்னணி நடிகைகளை போலவே பிரம்மண்டமான போட்டோஷூட்களை செய்து வருகிறார். அந்த வகையில் கோபிநாத் ரவி என்ற நடிகருடன் ஜோடியாக இணைந்து புது கான்செப்டில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதை பார்த்துவிட்டு ரசிகர்கள் அனைவரும் இவர்தான் உங்கள் காதலரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.