ஜீவனாம்சம் ரூ.50 கோடியாம் ; பரவும் செய்தி - என்ன சொல்கிறார் நாகசைதன்யா
ADDED : 1485 days ago
நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்த நடிகை சமந்தா தற்போது அவரை நான்கு மாதமாக பிரிந்து வாழ்வதாகவும், விவாகரத்துக்கு காத்திருப்பதாகவும் தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஜீவனாம்சமாக 50 கோடி ரூபாய் வரை நாகசைதன்யா சமந்தாவுக்கு தரவுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில் நாகசைதன்யா அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது: வாழ்க்கை, தொழில் இரண்டையும் ஒன்று கலக்க விட்டதில்லை. இதை நான் ஆரம்பத்தில் இருந்தே பின்பற்றுகிறேன். அவரும் அதையே செய்கிறார். இன்று ஒரு செய்திக்கு பின், அடுத்த செய்தி நொடியில் வந்து விடுகிறது. முந்தையை செய்தியை, புதிய செய்தி நீர்த்து போகச் செய்துவிடுகிறது. மக்கள் மனதில் எந்த செய்தியும் நீடிப்பதில்லை. உண்மையான செய்தி மட்டுமே மக்களிடையே தங்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.