மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
1444 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
1444 days ago
நிஷாந்த் கலிதிண்டி என்ற புதுமுகம் தயாரித்து, இயக்கி உள்ள படம் கடைசீல பிரியாணி. வசந்த் செல்வம், ஹக்கிம் ஷா, விஜய் ராம் மற்றும் பல புதுமுகங்கள் நடித்துள்ளனர். அஜீம் மொஹம்மத் - ஹெஸ்டின் ஜோஸ் ஜோசப் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஜூடா பால், நேய்ல் செபாஸ்டியன் பாடலுக்கு இசை அமைத்துள்ளனர். வினோத் தணிகாசலம் பின்னணி இசை அமைத்துள்ளார். வினோத் தணிகாசலம்.
ஒய் நாட் ஸ்டூடியோ சார்பில் சசிகாந்த் வெளியிடுகிறார். படம் பற்றி இயக்குனர் நிஷாந்த் கலிதிண்டி கூறியதாவது: பழிவாங்குவதற்காக கேரளாவுக்குச் செல்லும் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் பற்றிய கதை. கேரளாவில் உள்ள அழகான இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இதே பாணியில் வெளியான முந்தைய படங்களைப் போலல்லாமல், இது ஒரு தனித்துவமான சுவாரசியமான கதையுடன் கூடிய படமாக இருக்கும்.
ஆவணப்படங்கள், குறும்படங்கள், விளம்பர படங்கள் மற்றும் இசை ஆல்பங்களை இயக்கியதில் கிடைத்த அனுபவத்தைப் வைத்து திரைப்பட இயக்குனராகி இருக்கிறேன்.படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளிவருகிறது.என்றார்.
1444 days ago
1444 days ago