எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் பிரமாண்ட வெப்சீரிஸ்
ADDED : 1495 days ago
நெஞ்சம் மறப்பதில்லை படத்தை அடுத்து மாநாடு, டான் படங்களில் வில்லனாக நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா, இதையடுத்து கொலைகாரன் படத்தை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கும் ஐஸ்வர்யா என்ற வெப்சீரிஸில் நாயகனாக நடிக்கிறார். இந்த வெப்சீரிஸை சினிமாவுக்கு நிகராக பிரமாண் டமாக தயாரிப்பதால் ரூ.40 கோடி பட்ஜெட் போடப்பட்டுள்ளதாம். மேலும், எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து பல பிரபல சினிமா நடிகர் நடிகைகள் நடிக்கும் இந்த ஐஸ்வர்யா வெப்சீரிஸில் டான் படப்பிடிப்பு முடிந்ததும் நடிக்கப்போகிறாராம் எஸ்.ஜே. சூர்யா.