உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பொது நன்மைக்காக திருப்பதி சென்ற பிரபு

பொது நன்மைக்காக திருப்பதி சென்ற பிரபு

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இதனால் திருமாலின் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாமல் தவித்தார்கள். இப்போது அடுத்தடுத்து செல்கிறார்கள்.

தெலுங்கு இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில்ராஜ், நடிகை நயன்தாரா, அவரது காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவன், ரஜினியின் மகள்கள், நடிகை சமந்தா உள்ளிட்ட பல செலிபிரிட்டிகள் சமீபத்தில் திருப்பதி சென்றார்கள். இந்த நிலையில் நடிகர் பிரபு தனது மகன் நடிகர் விக்ரம் பிரபு உள்ளிட்ட குடும்பத்தினருடன் திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனாவில் இருந்து சீக்கிரம் அனைத்து மக்களும் விடுபட வேண்டும், அப்படி நடக்கும் பட்சத்தில் திருப்பதி வந்து வழிபடுவதாக வேண்டி இருந்தேன். கொரோனா சூழ்நிலை விலகி வருவதால் வேண்டுதலை நிறைவேற்ற வந்தேன். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !