மலையாள டிவி நடிகை நிமோனியாவுக்கு பலி
ADDED : 1467 days ago
கேரளாவில் பிரபலமான நடன கலைஞர் ஸ்ரீலட்சுமி. முறைப்படி நடனம் கற்ற ஸ்ரீலட்சுமி கேரள சபாக்களில் ஆடி புகழ்பெற்றவர். கடந்த ஆண்டு சிறந்த நடன கலைஞருக்கான மாநில அரசின் விருதை பெற்றார். ஸ்ரீலட்சுமி பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஏராளமான சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார். 38 வயதான ஸ்ரீலட்சுமிக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். ஸ்ரீலக்ஷ்மிக்கு வினோத் என்கிற கணவரும், இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.