உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / போட்டியில் இருந்து பின்வாங்கிய அமீர்கான்

போட்டியில் இருந்து பின்வாங்கிய அமீர்கான்

ஹிந்தியில் அமீர்கான் தயாரித்து நடித்து வரும் படம் லால் சிங் சத்தா. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் நடிப்பதன் மூலம் ஹிந்தியில் அறிமுகமாகிறார். அத்வைத் சந்தன் இயக்குகிறார். இப்படத்தை இந்த ஆண்டு கிறிஸ்துமஸ்க்கு வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ்க்கு மும்பையில் 83, சர்க்கஸ், ஜெர்ஸி என பல படங்கள் திரைக்கு வருவதால் எதிர்பார்த்தபடி தியேட்டர் கிடைக்காது என்று லால் சிங் சத்தா படத்தின் ரிலீஸ் தேதியை 2022ஆம் ஆண்டு பிப்ரவரி14-ந்தேதிக்கு தள்ளி வைத்து விட்டார் அமீர்கான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !