ருத்ர தாண்டவம் படத்தைப் பார்த்து வாழ்த்திய ஷாலினி அஜித்
ADDED : 1495 days ago
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். அவருடைய மனைவி ஷாலினி. அஜித்தின் மைத்துனரும், ஷாலினியின் அண்ணனுமான ரிச்சர்ட் நடித்துள்ள ருத்ர தாண்டவம் படம் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
தனது அண்ணன் நடித்த படத்தைப் பார்த்த ஷாலினி அவருக்கும் படக்குழுவினருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து போட்டோவை மட்டும் பகிர்ந்துளளார் படத்தின் இயக்குனர் மோகன் ஜி.
ஷாலினி இப்படத்தைப் பார்த்து வாழ்த்தியதற்கு இரு வேறுவிதமான கருத்துக்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். சாதி, மதம் பற்றிய படத்திற்கு ஷாலினி அஜித் ஆதரவு தருகிறாரா என்று ஒரு சாராரும், நல்ல படத்திற்கு அவர் ஆதரவு தருவதில் என்ன தவறு என்று மற்றொரு சாராரும் அவருக்கு ஆதரவாக கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.
பா.ரஞ்சித், மோகன் ஜி இருவரும் அவரவர் சார்ந்த சாதி பற்றிய படங்களை எடுத்து வெளியிட்டு தமிழ் சினிமாவில் சாதிப் பிரிவினையை உருவாக்கி, ரசிகர்களிடத்திலும் சாதிப்பற்றைத் தூண்டி விடுகிறார்கள் என்று நடுநிலைவாதிகள் கருத்து தெரிவிக்கிறார்கள்.