சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கும் காஜல் பசுபதி
ADDED : 1461 days ago
மியூசிக் சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக தனது கேரியரை தொடங்கிய நடிகை காஜல் பசுபதி, தற்போது டிவி சீரியலில் நடிக்கவுள்ளார்.
கண்ணான கண்ணே சீரியலில் ராகுல் ரவி, நிமிஷிகா மற்றும் பப்லு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். டிஆர்பியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த தொடரில் புதிய கதாபாத்திரம் ஒன்றில் நடிகை காஜல் பசுபதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. காஜல் பசுபதி கண்ணான கண்ணே தொடரில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். இந்நிலையில் நடிகர் பப்லு காஜல் பசுபதியுடன் இணைந்து எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது. பக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு காஜல் பசுபதி நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.