பிரிவுக்குப் பின் சமந்தா பதிவிட்ட தத்துவார்த்தப் பதிவு
ADDED : 1463 days ago
சமந்தா, நாக சைதன்யா ஜோடி இல்லற வாழ்வில் இருந்து நான்கு வருடங்களுக்குள் பிரிந்தது தமிழ், தெலுங்குத் திரையுலகை மட்டுமல்லாது ஹிந்தித் திரையுலகம் வரை பரபரப்பாகப் பேச வைத்திருக்கிறது. பிரிவு பற்றிய அறிவிப்பை இன்ஸ்டாவில் பதிவிட்ட பிறகு வேறு எந்தப் பதிவையும் போடாமல் இருந்த சமந்தா, ஸ்டோரியில் இன்று பதிவிட்டிருக்கும் தத்துவார்த்தமான ஒரு விஷயம் எதையோ உணர்த்துவதாக உள்ளது.
“இந்த உலகத்தை நான் மாற்ற விரும்பினால், நான் என்னை மாற்றிக் கொள்ள வேண்டும். என் படுக்கையை நான் உருவாக்க வேண்டும். அதிகநேரம் தூங்க கூடாது, அலமாரியை துடைப்பது உள்ளிட்ட விஷயங்களை நானே செய்யணும். நம் கனவை ஜெயிக்க அதை நோக்கி நாம் போகணும், ம்ம்ம்ம்ம்ம்” எனப் பதிவிட்டுள்ளார்.
சமந்தா இரண்டு தினங்களுக்கு முன்பு நாக சைதன்யாவுடனான தன்னுடைய பிரிவைப் பற்றி அறிவித்த பிறகு அவர் இப்படி பதிவிட்டுள்ளதால் இந்தப் பதிவை பலரும் பல கோணங்களில் பார்க்கின்றனர். தன்னுடைய பிரிவுக்குக் காரணமான ஏதோ ஒரு விஷயத்தை அவர் இந்தப் பதிவில் பதிவிட்டிருக்கிறார் என்று கிசுகிசுக்கிறார்கள்.