உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இங்கிலாந்து பட விழாவில் ஆர்யாவின் மகாமுனி 9 பிரிவுகளில் போட்டி

இங்கிலாந்து பட விழாவில் ஆர்யாவின் மகாமுனி 9 பிரிவுகளில் போட்டி

மெளன குரு படத்தின் மூலம் கவனம் ஈர்த்த சாந்தகுமாரின் அடுத்த படம் மகாமுனி. இதில் ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் உள்பட பலர் நடித்திருந்தார்கள். ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார். 2019ம் ஆண்டு வெளிவந்த இந்த படம் தியேட்டர்களில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால் தற்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்து வருகிறது.

இந்த நிலையில் வருகிற நவம்பர் 9ம் தேதி முதல், 12ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் மகாமுனி படம் 9 பிரிவுகளில் போட்டியிடுகிறது. வெளிநாட்டு மொழி படத்திற்கான போட்டியில் சிறந்த நடிகர் (ஆர்யா), சிறந்த நடிகை (இந்துஜா),சிறந்த துணை நடிகை (மஹிமா நம்பியார்), சிறந்த பின்னணி இசை(தமன்), ஒளிப்பதிவு (அருண் பத்மநாபன்), சிறந்த எடிட்டிங் (சாபு ஜோசப்), சிறந்த திரைக்கதை (சாந்தகுமார்), ஜூரி விருது (சாந்தகுமார்) மற்றும் சிறந்த திரைப்படம் (மகாமுனி).ஆகிய பிரிவின் கீழ் போட்டியிடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !