பாய்பிரண்ட் உடன் ஸ்ருதிஹாசன் கலாட்டா
ADDED : 1484 days ago
தந்தையை போலவே பரபரப்புக்கு பெயர் பெற்றவராக மாறி வருகிறார் ஸ்ருதிஹாசன். ஏற்கனவே காதலில் தோல்வியை சந்தித்த, ஸ்ருதி, மீண்டும் அசாம் மாநிலத்தை சேர்ந்த சாந்தனு ஹசாரிகாவுடன் காதல் வலையில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவருடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ஸ்ருதிஹாசன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ஸ்ருதிஹாசனை குதிரை போல் பாவித்து ஏறி சவாரி செய்து கிண்டல் செய்துள்ளார் சாந்தனு ஹசாரிகா. பதிலுக்கு அவரை சமோசா என ஸ்ருதி கிண்டலடித்துள்ளார். இவர்களின் கலாட்டா வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின.