எனக்காக தன் திறமையை காட்டாத அண்ணன்: கமல் உருக்கம்
ADDED : 1482 days ago
கமல்ஹாசனின் இரண்டாது அண்ணன் சந்திரஹாசன். கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இண்டர்நேஷனல் பணிகளை கவனித்து வந்தார். அவ்வப்போது கமல் தயாரிக்கும் படங்களில் தலைகாட்டுவார். 3 ஆண்டுகளுக்கு முன்பு மகள் வீட்டுக்கு லண்டனுக்கு சென்றவர் அங்கு உடல்நலக் குறைவால் காலமானார்.
சந்திரஹாசன் கதையின் நாயகனாக நடித்துள்ள அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க படம் வருகிற 8ம் தேதி சோனி லைவ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
இது குறித்து கமல் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: என் திறமையை வெளிப்படுத்தும் பேரார்வத்தில் தன் திறமையைத் திரையில் காட்டாமலே போய்விட்டவர் சந்திரஹாசன். அவர் நடித்த கடைசிப் படம் அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க, அக்டோபர் 8-ம் தேதி சோனி லைவ்வில் வெளியாகிறது. என்னை வாழ்த்தியவரை வணங்க கடமைப்பட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.