அண்ணி மீது ஹன்சிகா வழக்கு
நடிகை ஹன்சிகா சமீபத்தில் தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். அதற்கு முன்பே ஹன்சிகாவின் அண்ணன் பிரசாந்த் மோத்வானி தனது மனைவி முஸ்கான் நான்சியிடமிருந்து விவாகரத்து பெற்றார். இவர் ஹிந்தி தொலைக்காட்சி நடிகை.
அண்ணனுக்கும், அண்ணிக்கும் மோதல் நடந்போது அண்ணி தனது கணவர் மீதும், ஹன்சிகா மீதும் போலீசில் புகார் கொடுத்தார். இதில் தனது கணவர் அவரது சகோதரி ஹன்சிகா, தாயார் ஜோதி மோத்வானி ஆகியோர் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், பாலியல் ரீதியாக சித்ரவதை செய்தார் இதனால் தனக்கு முகவாத நோய் பாதிப்பு ஏற்பட்டதாக அந்த புகாரில் தெரிவித்திருந்தார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஹன்சிகா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார் நான்சி.
இந்த நிலையில் தற்போது ஹன்சிகா மோத்வானி தனது அண்ணி மீது 2 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு மும்பை திண்டோஷி செஷன்ஸ் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் “எனது அண்ணனுக்கும் நான்சிக்கும் திருமணம் நடந்தபோது, நான்சியிடம் 27 லட்சம் ரூபாயை கடனாக கொடுத்தேன். அந்தப் பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றுவதற்காகவே, என் மீது நான்சி பொய்யான புகார்களை சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்.
நான் அவர்களுடன் வசிக்காத நிலையில், என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. எனவே, எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு அவர் 2 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும். மேலும் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதுடன், இனிமேல் எனக்கு எதிராக எந்த ஒரு கருத்தையும் பேசக்கூடாது என்று நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.