உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழில் வெளியாகும் தி பாஸ் பேபி 2

தமிழில் வெளியாகும் தி பாஸ் பேபி 2

4 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற அனிமேஷன் படம் தி பாஸ் பேபி. இதன் இரண்டாம் பாகம் தற்போது வெளியாக இருக்கிறது. குட்டி சிறுவன் தன் புத்திசாலிதனத்தால் எல்லோரையும் ஆட்டுவிக்கிற ஜாலி கதை.

இரண்டாம் பாகத்தை டாம் மெக்ரத் இயக்கி உள்ளார். அலக் பலட்வின், ஜேம்ஸ் பலட்வின், எனி சாட்ரிஸ் உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகள் அனிமேஷன் கேரக்டர்களுக்கு குரலும் உடல் மொழியும் கொடுத்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் உலக நாடுகளில் வெளியான படம் விரைவில் இந்தியாவில் வெளியாகிறது. ஆங்கிலத்துடன் தமிழ், தெலுங்கு , இந்தி மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !